நாமக்கல்: கணவரை அடித்து கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
நாமக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நாமக்கல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே கொடிக்கால்புதூர் ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு பாஸ்கர், லட்சுமணன், ராமன் ஆகிய 3 மகன்கள் உண்டு. இதில் மூன்றாவது மகனான ராமன்(38) கட்டட வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா(32). இவர்களுக்கு தீபிகா (12), ஸ்ரீ ஹரி (8) ஆகிய இரு குழந்தைகள் உண்டு. கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே ராமனிடம் உதவியாளராக பணியாற்றி வந்த அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (35) என்பவருடன் சத்யாவுக்கு முறையற்ற உறவு ஏற்பட்டது.
அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இத்தகவல் அறிந்து மனைவி சத்யாவை ராமன் கண்டித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராமனை, மனைவி சத்யா மற்றும் கள்ளக்காதலன் ராமமூர்த்தி ஆகிய இருவரும் அடித்து கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் அவரது உடலை தற்கொலை செய்து கொண்டது போல் தொங்க விட்டுள்ளனர். இத்தகவல் காவல்துறைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்ட இருவரும் ராமனின் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உதவியுடன் தகனம் செய்து விட்டனர்.
சகோதரர் மரணத்தில் சந்தேகமடைந்த பாஸ்கர் மற்றும் இலட்சுமணன் இருவரும் 27- ஆம் தேதி நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் காந்தியிடம் புகார் மனு அளித்தனர். அதனடிப்படையில் நாமக்கல் காவல் ஆய்வாளர் செல்வராஜ் சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்று சத்யா மற்றும் அவரது தந்தை கோவிந்தன், உறவினர்கள் பூங்காவனம், சுதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராமன் கொலை செய்யப்பட்டார் என்பது உறுதியானது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை ராமன் மனைவி சத்யா மற்றும் கள்ளக்காதலன் ராமமூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...