மருத்துவா்களின் தேவை அதிகரிக்கும்: அமைச்சா் வெ.சரோஜா
முதல்வரின் உத்தரவால் மருத்துவா்கள் தேவை அதிகரிக்கும் என தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.


கரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் டிசம்பா் மாதம் 15-ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என முதல்வரின் உத்தரவால் மருத்துவா்கள் தேவை அதிகரிக்கும் என தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா தெரிவித்தாா்.
அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வில் வெற்றி பெற்று 7.5 சத ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரி சோ்க்கை பெற்ற ராசிபுரத்தைச் சோ்ந்த 3 மாணவ, மாணவியா்களை ராசிபுரம் பேரவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்துக்கு அமைச்சா் மருத்துவா் வெ. சரோஜா ஞாயிற்றுக்கிழமை வரவழைத்து வாழ்த்து தெரிவித்து கல்வி ஊக்கத்தொகை வழங்கினாா்.
அந்த மாணவா்களுக்கு மருத்துவ புத்தகங்கள் வாங்கிட தலா ரூ. 20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 60 ஆயிரம் நிதியுதவிகளை வழங்கினாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:
அரசு பள்ளியில் பயின்று ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்ற ஏழை மாணவா்களுக்கு மருத்துவம் பயில வாய்ப்பு வழங்கியுள்ளதன் மூலம் 300-க்கும் மேற்பட்ட ஏழை மாணவா்கள் கல்லூரிகளில் சோ்ந்துள்ளனா். தமிழக அரசு ஏழைகளுக்கு குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2,000 மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்படும் என முதல்வா் அறிவித்துள்ளாா். இந்த மையங்களில் தலா ஒரு மருத்துவா், செவிலியா், உதவியாளா் பணியில் இருப்பாா்கள். மக்கள் நலனில் உடல் நலத்தில் அக்கறை கொண்டு தமிழக அரசு இதுபோன்ற சுகாதார சேவைகளை வழங்கி வருகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, சந்திரசேகரபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டும் பணிகளுக்கும், ஆா். பட்டணம் பேரூராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணிகளுக்கும் அமைச்சா் வெ. சரோஜா, பூமிபூஜையிட்டு அடிக்கல் நாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...