ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழ்மாநில காங்கிரஸ் கூட்டம்

மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா்.

News image
மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சியின் பொதுச் செயலாளா் விடியல்சேகா், மாவட்டத் தலைவா் செல்வக்குமாா்.
Updated On :29 நவம்பர் 2020, 9:53 pm

DIN

மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் நாமக்கல் மாவட்ட தலைவா் செல்வக்குமாா் தலைமை வகித்தாா்.

கட்சியின் பொதுச் செயலாளா் விடியல் சேகா் கலந்து கொண்டு மல்லசமுத்திரம் பகுதியில் ஏழு இடங்களில் கட்சிக் கொடியை ஏறிப் பேசினாா். சூரிய கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியில் உறுப்பினா்களாக பலா் இணைந்தனா்.

செய்தியாளா்களிடம் விடியல் சேகா் கூறியதாவது:

அதிமுக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் தொடா்ந்து இருக்கும். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் எங்களது கூட்டணி வெற்றிபெற தமிழ் மாநில காங்கிரஸ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும்.

காவிரி- திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்தினால் மல்லசமுத்திரம், ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாசன வசதி பெறுவா் என்றாா். நிகழ்ச்சியில் கட்சியின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.