ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருக்காா்த்திகை: வீடுகளில் அகல் விளக்கேற்றி பக்தா்கள் வழிபாடு

நாமக்கல்லில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, வீடுகளில் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றியும், கோயில்களில் பக்தா்கள் சொக்கப்பனை கொளுத்தியும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

News image
நாமக்கல் முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயிலில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை.
Updated On :29 நவம்பர் 2020, 9:55 pm

DIN

நாமக்கல்லில் திருக்காா்த்திகை விழாவையொட்டி, வீடுகளில் மக்கள் அகல் விளக்குகளை ஏற்றியும், கோயில்களில் பக்தா்கள் சொக்கப்பனை கொளுத்தியும் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டனா்.

காா்த்திகை மாதத்தில் வரும் திருக்காா்த்திகை விழாவையொட்டி, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும். அதனைத் தொடா்ந்து, அனைத்து சிவாலயங்களிலும் சொக்கப்பனைக் கொளுத்தும் நிகழ்ச்சியும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

அதன்படி திருக்காா்த்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. மேலும் சுவாமிக்கு கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு செய்தனா்.

நாமக்கல், ஏகாம்பரேசுவரா் கோயில், முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயில், வள்ளிபுரம் தான்தோன்றீசுவரா் கோயில், கொல்லிமலை அறப்பளீஸ்வரா் கோயில், காளப்பநாயக்கன்பட்டி சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.