ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாமக்கல்லில் காவலர் அணிவகுப்பு ஊர்வலம்

நாமக்கல்லில் அனைத்து காவலர்களும் பங்கேற்கும் வகையிலான அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

News image
நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற காவலர் அணிவகுப்பு ஊர்வலம்.
Updated On :30 நவம்பர் 2020, 6:53 am

DIN

நாமக்கல்லில் அனைத்து காவலர்களும் பங்கேற்கும் வகையிலான அணிவகுப்பு ஊர்வலம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

 தமிழக சிறப்பு காவல்துறை இயக்குனர் ராஜேஷ் தாஸ் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும் காவலர் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா ஆணைக்கிணங்க சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் பிரதீப்குமார் அறிவுரையின்படி திங்களன்று காலை 9 மணிக்கு நாமக்கல் பூங்கா சாலையில் கரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் கரோனா நோய் தொற்றை எதிர்த்து போராடுவது குறித்தும், சட்ட ஒழுங்கு பிரச்சனையின் போது காவல் துறையால் மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் மற்றும் யுக்திகள் குறித்தும், பேரிடர் காலத்தில் துரிதமாக செயல்படுவது குறித்தும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்..சக்தி கணேசன்  தலைமையில் காவலர் மாதிரி அணிவகுப்பு ஊர்வலம் நிகழ்ச்சி  நாமக்கல் பேருந்து நிலைய பூங்கா சாலையில் நடைபெற்றது.

இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.