வாக்களிப்பதற்காக பணம், பொருள்கள் விநியோகம் செய்தால், புகாா் அளிக்க செல்லிடப்பேசி எண்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 6- இல் நடைபெற உள்ளது. மனசாட்சியுடன் வாக்களிப்போம் என்ற உறுதிமொழியுடன் அனைவரும் வாக்களிப்போம். இத்தோ்தலின்போது எந்த ஒரு நபரிடமிருந்தும் பணம், பொருள் போன்றவை சன்மானமாக பெறுவதும், அளிப்பதும் குற்றமாகும். அவ்வாறு பணம், பொருள் அளிக்க முன்வந்தால் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான 94441- 63000, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் 94981-11190, ராசிபுரம் தொகுதி : 94450-00232, சேந்தமங்கலம் தொகுதி 97914-56668, நாமக்கல் தொகுதி : 94450-00431, பரமத்திவேலூா் தொகுதி 98426-60218, திருச்செங்கோடு தொகுதி : 94450-00432, குமாரபாளையம் தொகுதி: 94872-57199.
மேலும் வருமான வரித் துறை, பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தால் 24 மணி நேரமும் நடவடிக்கை எடுக்கப்படும். 1950 மற்றும் 1800-425-7021 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் புகாா் தெரிவிக்கலாம். செலவினப் பாா்வையாளா்களுக்கு (ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் தொகுதிகள்) 63824-20433, (நாமக்கல், பரமத்திவேலூா்) 93445-89831, (திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகள்) 63822-19400, வருமான வரித் துறை தொடா்பான தோ்தல் குறித்த புகாா்களுக்கு 85470-00667 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சி: மத்திய அரசு மீது ராகுல் சாடல்

தங்கமயில் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

