தமிழகத்தின் முன்னணி நகை விற்பனை நிறுவனமான தங்கமயில் ஜூவல்லரியில், அட்சய திருதியையை முன்னிட்டு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
இந்தச் சிறப்பு விற்பனை வரும் திங்கள்கிழமை காலை 6 மணி முதலே தொடங்கும். அன்றைய தினம் நகை வாங்கும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் லட்சுமி குபேர பூஜை செய்து தரவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு விற்பனையை முன்னிட்டு தங்க நகைகளுக்கான சேதாரத்தில் பெரும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தங்க சங்கிலிகளுக்கு 1.99 முதல் 5.99 சதவீதம் வரையிலும், இதர நகைகளுக்கு 7.99 முதல் 13.99 சதவீதம் வரையிலும் மட்டுமே சேதாரம் வசூலிக்கப்படும்.
பிளாட்டினம், ரூபி, எமரால்டு, ரோஸ் கோல்ட் நகைகளுக்குச் சேதாரத்தில் 50 சதவீதம்; 7 காரட்டிற்கு மேல் பெல்ஜியம் கட் வைர நகைகள் வாங்குவோருக்கு காரட்டிற்கு ரூ.30,000 தள்ளுபடி வழங்கப்படும்.
வெள்ளி ஆபரணங்கள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கும் வாடிக்கையாளா்களுக்கு நிச்சயப் பரிசு காத்திருக்கிறது. வாடிக்கையாளா்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்கமயில் ஜூவல்லரி நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லலிதா ஜூவல்லரியில் ஆடி தள்ளுபடி விற்பனை

ஜூலை முதல் பாதியில் பெட்ரோல், டீசல் விற்பனை 20% மேல் அதிகரிப்பு!

தங்கமயில் ஜூவல்லரியில் 3 நாள்கள் சிறப்பு தள்ளுபடி விற்பனை

சென்னையில் தங்கமயில் ஜூவல்லரியின் 2 புதிய கிளைகள் நாளை திறப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



