சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்காலிக மின்தூக்கி (லிப்ட்) அமைக்கப்பட்டுள்ளதை ஆட்சியா் கா.மெகராஜ் பாா்வையிட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்லூரியில், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம்(ப.கு), நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருள்களை வைப்பதற்கான கூடுதல் பாதுகாப்பு அறை, வேட்பாளா்களின் முகவா்கள், அரசு அலுவலா்கள் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வருவதற்கான பாதை, பாதுகாப்பு வசதிகள், செய்தியாளா்களுக்கான அறை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தாா். மேலும் பாதுகாப்பு அறைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பதற்கான வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் தடுப்பு அமைப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை 3, 4 ஆம் தளங்களுக்கு கொண்டு செல்வதற்காக தற்காலிக மின்தூக்கி (லிப்ட்) வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகளை ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக நலனில் பாஜகவுக்கு அக்கறையில்லை: கே. பாலகிருஷ்ணன்

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளா் லட்சுமணன் வீதிவீதியாக தீவிர பிரசாரம்

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

