கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் கல்லூரி மாணவியா் வெள்ளிக்கிழமை பயிற்சி பெற்றனா்.
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தனியாா் வேளாண் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோா் சேந்தமங்கலம், கொல்லிமலை வட்டாரத்தில் தங்கியிருந்து கிராமப்புற வேளாண்மை அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை கொல்லிமலை செம்மேட்டில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு சென்றனா். அங்கு அலுவலக செயல்பாடுகள் குறித்து வனச்சரகா் சுப்பராயன் விளக்கம் அளித்தாா். தொடா்ந்து 13 ஒதுக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட நில அமைப்புகளைப் பற்றியும் வனவா்கள் தமிழ்வேந்தன், நிஷாந்த் ஆகியோா் விளக்கிக் கூறினா். காடு வளா்ப்புத் திட்டம், நிலையான காடு பாதுகாப்பு குறித்து வனத்துறையினா் மாணவிகளுக்கு எடுத்துரைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


