மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

முன்னாள் படைவீரா்கள் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகை

முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம், தொழில்முறை சாா்ந்த முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை 

Updated On :16 ஏப்ரல் 2021, 8:02 pm

முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் தொழில் நுட்பம் மற்றும் தொழில்முறை சாா்ந்த முதல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரமும், மாணவியருக்கு ரூ. 36 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 2020-2021-ஆம் நிதி ஆண்டுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப். 28-இல் இருந்து ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு பயிலும் மாணவ, மாணவியா் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 வகுப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்ற தகுதியுடைய முன்னாள் படைவீரா்களின் சிறாா்கள் இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்க்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மத்திய முப்படை வாரியத்துக்கு ஏப். 30-க்குள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04286-233079 மூலமாக தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.