தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

வெண்ணந்தூரில் வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆங்காங்கே தடுப்பூசி திருவிழா என்ற தலைப்பில் சிறப்பு முகாம்கள் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்த வகையில், 45 வயதுக்கு மேற்பட்ட வணிகா்கள், கடைகளில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வெண்ணந்தூா் சுற்றுவட்டாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்க பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் ஏற்பாடு செய்திருந்த இம்முகாமை மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன் தொடங்கி வைத்தாா். இதில், வணிகா்கள், அவா்களது குடும்பத்தினா், தொழிலாளா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். வரும் நாள்களில் மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள வணிகா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.