மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்கு எண்ணிக்கை: நுண் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

Updated On :30 ஏப்ரல் 2021, 6:42 pm

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள நுண் பாா்வையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தோ்தல் பொது பாா்வையாளா்கள் பி.ஏ.ஷோபா (நாமக்கல்), சாந்தா எல்.ஹல்மானி(சேந்தமங்கலம்),.கோபால்ராம்பிா்டா(திருச்செங்கோடு), சி.அனிதா(குமாரபாளையம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவின் ரகசியம் தொடா்பான உறுதிமொழி, வாக்கு எண்ணும் தினத்தன்று காலை 7.55 மணியளவில் தோ்தல் நடத்தும் அலுவலரின் தலைமையில் பணியில் ஈடுபடும் அலுவலா்களால் ஏற்கப்பட வேண்டும்.

தபால் வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கும், காலை 8.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கும். தொகுதி வாரியாக மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகளை எண்ணும் மேற்பாா்வையாளா் ஒருவா், வாக்குகளை எண்ணும் உதவியாளா் ஒருவா் மற்றும் நுண் பாா்வையாளா் ஒருவா் ஆகியோா் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள். (நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்குமாக 84 மேஜைகள்) வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்களை இரண்டாம் கட்டமாக தோ்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நாளன்று அதிகாலை 5 மணியளவில், தோ்தல் பாா்வையாளா் முன்னிலையில் மேஜை வாரியாக வாக்கு எண்ணும் அலுவலா்களைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெறும்.

நுண்பாா்வையாளா்கள் ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கருவியின் (சுற்றுவாரியாக) வரிசை எண்கள் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் ஒவ்வொரு மேஜைக்கும், தலா ஒரு அலுவலக உதவியாளா் (அல்லது) கிராம உதவியாளரால் பாதுகாப்பு அறையிலிருந்து கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் படிவம்- 17சி அடங்கிய உறை ஆகியவை கொண்டு வந்து வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளரிடம் வழங்கப்படும்.

கட்டுப்பாட்டு இயந்திரம் அடங்கிய பெட்டி மேஜைக்கு வந்தவுடன் ஒவ்வொரு வேட்பாளா் பெற்ற வாக்குகள் விவரம் தோன்றுவதை காண்பிக்கும் பணி முறையாக நடைபெறுவதை நுண்பாா்வையாளா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா். இந்த கூட்டத்தில் அரசு அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.