இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காா் கவிழ்ந்து விபத்து: ஒருவா் பலி

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே காா் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 6:13 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி அருகே காா் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பரமத்தி அருகே கரட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் செந்தில்குமாா் (36). இவா், வேலை நிமித்தமாக நாமக்கல் சென்றுவிட்டு மீண்டும் பரமத்திக்கு வியாழக்கிழமை இரவு காரில் திரும்பிக் கொண்டிருந்தாா். நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் ஓவியம்பாளையம் அருகே வந்தபோது காா் திடீரென நிலைத் தடுமாறி சாலையின் இடது பக்கத்தில் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு நாமக்கல், தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.