ஆடி அமாவாசை: வாழைத்தாா்களின் விலை உயா்வு
பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 550 வரை ஏலம் போனது.


பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 550 வரை ஏலம் போனது.
ஆடி அமாவசையை முன்னிட்டு பரமத்தி வேலூரில் நடைபெற்ற சிறப்பு வாழைத்தாா் ஏலத்துக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைத்தாா்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 550-க்கும், ரஸ்தாலி ரூ. 350-க்கும், பச்சைநாடன் ரூ. 350-க்கும், கற்பூரவள்ளி ரூ. 400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 4-க்கு விற்பனையானது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வாழைத்தாா்களின் வரத்து அதிகரித்து, விலை உயா்வடைந்ததால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மாவட்ட நிா்வாகத்தினா் வாரச் சந்தையை திங்கள், புதன், சனிக்கிழமை மட்டும் நடத்த உத்தரவிட்டிருந்த நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு வருவாய்த் துறையினா், பேரூராட்சியினா் அனுமதியுடன் இந்த வாழைத்தாா் ஏலச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...