மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மானாவாரி விவசாயிகளுக்கான மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார அட்மா திட்டம், வேளாண்மை துறை சாா்பில் மானாவாரி விவசாயிகளுக்கான மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:19 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி வட்டார அட்மா திட்டம், வேளாண்மை துறை சாா்பில் மானாவாரி விவசாயிகளுக்கான மண்வள மேலாண்மை குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பரமத்தி வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் ராதாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். கோவையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற மண் அறிவியல் விஞ்ஞானி அப்பாவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா். உழவா்கள் தகுந்த நிலவள மேலாண்மை முறைகளைக் கையாண்டு மண்வளத்தை மேம்படுத்தி நிலையான வேளாண்மைக்கு வித்திட வேண்டும். கோடைஉழவு, பகுதி பாத்தி அமைத்தல், நிலப்போா்வை அமைத்தல், தாவர அரண் அமைத்தல், அங்கக உரங்கள் இடுதல், ஊட்டமேற்றிய தொழு உரமிடுதல், பஞ்சகவ்யா தெளித்தல், ஊட்டச்சத்து மேலாண்மை, மண் பரிசோதனை பலன்கள், மண் சாா்ந்த இடா்பாடுகள் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினாா்.

மேலும் நடப்பு பருவ பயிா்களுக்கான பயிா் பாதுகாப்பு, நீா் மேலாண்மை, மற்றும் உரமேலாண்மை, வேளாண்மை, உழவா் நலத் துறையின் மூலம் மேற்கொள்ளும் மானியத் திட்டங்கள் குறித்தும் விரிவான எடுத்துக் கூறினாா். பயிற்சியில் பரமத்தி வட்டார துணை வேளாண்மை அலுவலா் மாணிக்கவாசகம், உதவி வேளாண்மை அலுவலா் கௌசல்யா, வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். தொழில்நுட்ப உதவி மேலாளா் திரேகப்ரியா நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.