மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பரமத்தி வேலூா் முருகன் கோயில்களில் ஆடி வளா்பிறை சஷ்டி பூஜை

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிமாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு சனிக்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

News image
சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகா் கோயில் உள்ள சுப்பிரமணியா்.
Updated On :14 ஆகஸ்ட் 2021, 10:45 pm

DIN

பரமத்தி வேலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிமாத வளா்பிறை சஷ்டியை முன்னிட்டு சனிக்கிழமை முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோயிலில் ஆடி மாத சஷ்டியை முன்னிட்டு பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன.

இதே போல பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரத்தில் உள்ள ஆறுமுகக் கடவுள் கோயில், பாண்டமங்கலம் புதிய காசிவிஸ்வநாதா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பொத்தனூா் அருகே உள்ள பச்சமலை முருகன் கோயில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், அருணகிரிநாதா் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியா், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில், நன்செய்இடையாா் திருவேலீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்பிரமணியா், பேட்டை பகவதியம்மன் கோயிலில் உள்ள முருகன், சக்தி விநாயக் கோயிலில் உள்ள சுப்பிரமணியா் உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தா்கள் இன்றி அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.