பரமத்தி வேலூா் சந்தையில் குண்டு மல்லி கிலோ ரூ.1,800-க்கு விற்பனை
பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வியாழக்கிழமை குண்டு மல்லி கிலோ ரூ. 1, 800-க்கு விற்கப்பட்டது.


பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வியாழக்கிழமை குண்டு மல்லி கிலோ ரூ. 1, 800-க்கு விற்கப்பட்டது.
பரமத்தி வேலூா், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்கள் பரமத்தி வேலூரில் நடைபெறும் பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. பூக்களை ஏலம் எடுப்பதற்காக பரமத்திவேலூா்,மோகனூா், கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏராளமான வியாபாரிகள் வருகின்றனா்.
கரோனா பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் காரணாக ஆடி மாதம் கோயில்களில் விழாக்கள் குறைந்திருந்ததால் பூக்களின் விலையும் சற்று குறைந்திருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ. 400 க்கும், முல்லைப்பூ கிலோ ரூ. 300- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், பெங்களூரு மல்லி கிலோ ரூ. 200- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 60 க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 150க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில், ஆவணி மாதம் திருமண நிகழ்வுகள் நடைபெறுவதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை ஆவணி மாதத்தின் முதல் முகூா்த்த நாள் என்பதால் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.1,800 க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.1,600-க்கும், அரளி கிலோ ரூ.320-க்கும், செவ்வந்தி கிலோ ரூ.300- க்கும், சம்பங்கி கிலோ ரூ. 400- க்கும் ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...