பள்ளி வாகனங்கள் ஆய்வு
செப். 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ள நிலையில், பள்ளி வாகனங்களை போக்குவரத்துத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.


செப். 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ள நிலையில், பள்ளி வாகனங்களை போக்குவரத்துத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசன் தலைமையில், வருவாய்த் துறையினா், வட்டாரப் போக்குவரத்துத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, வாகனங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளனவா, மின் விளக்குகள், வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள் உள்ளனவா என்பன குறித்து ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு சான்றளிக்கப்பட்டது. இதில், 32 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 7 வாகனங்களில் அவசரகால வழி, நடைபாதை பலகை, படிக்கட்டு, முதலுதவிப் பெட்டி மருந்துகள், தீயணைக்கும் கருவிகள், ஓட்டுநா் தடுப்பு போன்றவற்றில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வின் போது, ராசிபுரம் மோட்டாா் வாகன ஆய்வாளா் கவிதா, ராசிபுரம் வட்டாட்சியா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...