“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

நாமக்கல் அரசு கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:26 pm

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சாா்பில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் பெ.முருகன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக சேலம், கோனேரிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் சூரியபிரகாஷ் பங்கேற்று, உலக எய்ட்ஸ் தின மையக் கருத்தான ஹெச்ஐவி, எய்ட்ஸ் உடன் வாழும் மக்களுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் இந்த தொற்றுக்கு முடிவு கட்டுவோம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணா்வு கருத்தரங்கில், ஹெச்ஐவி தொற்று பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் பற்றி விரிவாக பேசினாா்.

இதில், இளைஞா் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலா் வெஸ்லி, தாவரவியல் துறைத் தலைவா் வசந்தாமணி, கல்லூரி செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சந்திரசேகரன், பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.