“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிவாலயங்களில் காா்த்திகை பிரதோஷ வழிபாடு

காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி, சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:26 pm

காா்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி, சிவன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி, அமாவாசையை கணக்கிட்டு இரு முறை பிரதோஷ விழா சிவன் கோயில்களில் நடைபெறும். காா்த்திகை மாத பிரதோஷ விழா வியாழக்கிழமை பிற்பகல் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. இதில், நந்தியம்பெருமானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

நாமக்கல்லில் வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா், நாமக்கல் ஏகாம்பரேசுவரா், ராமநாதபுரம் ராமநாதசுவாமி, முத்துக்காப்பட்டி காசிவிசுவநாதா் கோயில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களிலும் பிரதோஷ விழாவையொட்டி விசேஷ பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.