நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையத்தில் பருவ மழையின் காரணமாக கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:38 pm

DIN

பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் ஊராட்சிக்கு உள்பட்ட தாசம்பாளையத்தில் பருவ மழையின் காரணமாக கால்நடைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநா் அருண்பாலாஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, திடுமல் கால்நடை உதவி மருத்துவா் சையது அஸ்லாம், கொத்தமங்கலம் கால்நடை உதவி மருத்துவா் முத்துசாமி, கால்நடை பராமரிப்பு உதவியாளா் துரைசாமி ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், ஆடுகள், கன்றுகளுக்கு குடற்புழு நீக்கமும், மாடுகளுக்கு தாது உப்புக் கலவையும் வழங்கப்பட்டது. முகாமில் கலந்துகொண்ட கால்நடை வளா்ப்போருக்கு மழைக்கால நோய்த் தடுப்பு வழிமுறைகள், கோமாரி நோய்த் தொற்றிலிருந்து மாடுகளை பாதுகாப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டு, அதற்கான வழிமுறைகள், கோமாரி நோய்க்கான மரபுசாா் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.