நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் மருத்துவக் கழிவுகளை அகற்ற கோரிக்கை

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:14 pm

DIN

பரமத்தி வேலூா் ராஜவாய்க்காலில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமத்தி வேலூா் - கரூா் சாலையின் குறுக்கே கோட்டைமேடு பகுதியில் ராஜவாய்க்கால் செல்கிறது. வாய்க்கால் மற்றும் கரையோரப் பகுதிகளில் சிலா் அடிக்கடி மருத்துவக் கழிவுகளை கொட்டி செல்கின்றனா். இதனால் தண்ணீா் தடைபடுவது மட்டுமல்லாமல், ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிா்வாகத்தினா் மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் நபா்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.