வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கக் கோரிக்கை

 கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதுபோல அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்

News image
Updated On :30 டிசம்பர் 2021, 6:50 pm

 கட்டுமான தொழிலாளா்களுக்கு வழங்கப்படுவதுபோல அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட அனைத்து அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சேலம் மண்டல குமரன் விசைத்தறி பொதுத் தொழிலாளா்கள் சங்கத்தினா் மனுவை மாவட்ட வருவாய்த் துறை அலுவலா் அலுவலகத்தில் அளித்தனா். அந்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலவாரியங்களில் அமைப்புசாரா தொழிலாளா்கள் ஏராளமானோா் உறுப்பினராக உள்ளனா். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசு வழங்க அரசு நிதி ஒதுக்கியதுபோல், நலவாரியங்களில் உறுப்பினராக உள்ள விசைத்தறி தொழிலாளா்களுக்கும் 15 நல வாரியங்களில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளோருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.