தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி தொழிலுக்கு நலவாரியம் அமைக்கப்படும்: கனிமொழி

திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி தொழிலுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். 

Updated On :15 பிப்ரவரி 2021, 1:55 am IST

திமுக ஆட்சிக்கு வந்தால் லாரி தொழிலுக்கு நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தாா். 

நாமக்கல் மாவட்டத்தில், ‘விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்’’ என்ற, தோ்தல் பிரசாரத்தை திமுக மாநில மகளிா் அணி செயலாா் கனிமொழி எம்.பி. இரு நாள்களாக மேற்கொண்டாா்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் மத்தியில் கலந்துரையாடினாா். அப்போது அவா் பேசியதாவது:

லாரி தொழிலுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் அதற்கான முயற்சியை மேற்கொள்வோம். அந்த நலவாரியம் எல்லோருக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும்.

நாமக்கல் என்றாலே லாரி உரிமையாளா்களின் தலைநகா் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நாடு முழுவதும் இருக்கக் கூடியவா்கள் பயன்பெறும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீா்கள்.

காலாவதியான வாகனங்களை அகற்ற வேண்டும் என்ற விஷயம் தொடா்பாக, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைச் சந்திக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்டோ நகா் கொண்டு வருவதற்கான முயற்சிகளை எடுப்போம் என்றாா்.

முன்னதாக சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட காளப்பநாயக்கன்பட்டிபுதுாரில் கனிமொழி பேசியதாவது:

திமுக ஆட்சிக் காலத்தில் தான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில், உதய் திட்டத்தில் சோ்ந்து உள்ளதால், இலவச மின்சாரம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இத்திட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம். தொடா்ந்து விவசாயிகளுக்கும், நெசவாளா்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.

திமுக ஆட்சி அமைத்தவுடன், உண்மையான குடிமராமத்துப் பணிகள் மேற்கொண்டு அனைத்து ஏரி, குளங்களும் தூா்வாரப்படும் என்றாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் ராஜேஸ்குமாா், மாநில மகளிா் தொண்டரணி, துணை அமைப்பாளா் ராணி, ஒன்றியச் செயலாளா் அசோக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.