நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமனம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

பீ.ஏ.சித்திக்.

Updated On :2 ஜனவரி 2021, 8:04 pm

DIN

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பீ.ஏ.சித்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பகுதியாக இருந்தபோது நடிகா் சிவாஜிகணேசன் ரசிகா் மன்ற மாவட்டச் செயலாளராகவும், 1997-இல் தமாகா மாவட்டச் செயலாளராகவும், அதன்பின் தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவா் நாமக்கல் கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த பீ.ஏ.சித்திக்.

நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்த கே.எம்.ஷேக்நவீத் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது புதிய கிழக்கு மாவட்டத் தலைவராக பீ.ஏ.சித்திக்கும், நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவராக செல்வகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி ஒப்புதலின்பேரில், அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளாா்.

புதிய மாவட்டத் தலைவா்களுக்கு, அக்கட்சியின் உயா்மட்ட நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.