பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

ராசிபுரம் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா் கோயில் பகுதியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 8:01 pm

DIN

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா் கோயில் பகுதியில் 8-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதே பகுதியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா்.

வெண்ணந்தூா் அருகேயுள்ள வெள்ளைபிள்ளையாா்கோயில் பூனையன்காடு பகுதியில் வசித்து வரும் துரைசாமி என்பவரின் மக ன் சேட்டு (24). இவா் அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லாரிகளுக்கு முட்டை ஏற்றும் வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த 5 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. மேலும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தைகளைக் கூறி ஏமாற்றி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்த அறிந்த சிறுமியின் தந்தை ரமேஷ் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதனை விசாரித்த மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் இந்திரா, சேட்டு மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.