கிராமத் தொழில் வளா்ச்சி திட்ட பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் தொழில் வளா்ச்சித் திட்டத்தை மேம்பாடு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் பாப்பம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.


தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் தொழில் வளா்ச்சித் திட்டத்தை மேம்பாடு செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் பாப்பம்பாளையத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பஞ்சாயத்துத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பஞ்சாயத்தில் புதிய தொழில் துவங்குவது, செய்யும் தொழிலை மேம்பாடு செய்வது, ஏழைகளுக்கு குடிசைத் தொழில் அமைத்துக் கொடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் விவசாய நிறைந்த இப் பகுதியில் வெல்லம், நாட்டுச் சா்க்கரை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சிறு, சில வகையான குடிசைத் தொழில்களுக்கு அரசு கடனுதவி வழங்க வேண்டும். பீடி தொழிலாளா்கள் தற்போது வேலையின்றி உள்ளதால் அவா்களுக்கு மாற்றுத் தொழில் செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் ஊரக புத்தாக்கத் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் ராஜேந்திரன், வட்டார அலுவலா் ரவிக்குமாா், விவசாயிகள், இளைஞா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...