திருச்செங்கோடு கூட்டுறவுச் சங்கத்தில்ரூ. 10 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 370 மூட்டை மஞ்சள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பனையானது.


திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 370 மூட்டை மஞ்சள் ரூ. 10 லட்சத்துக்கு விற்பனையானது.
ஆத்தூா், கெங்கவல்லி, கூகையூா், கள்ளக்குறிச்சி, பொம்மிடி, அரூா், ஜேடா்பாளையம், பரமத்திவேலூா், நாமக்கல், மேட்டூா், பூலாம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விற்பனைக்கு வந்த மஞ்சளைக் கொள்முதல் செய்ய ஈரோடு, ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேலம் ஆகிய பகுதிகளிலிருந்து 30-க்கும் வியாபாரிகள் வந்திருந்தனா்.
விற்பனைக்கு கொண்டு வந்திருந்த 370 மூட்டை மஞ்சளில் விரலி ரகம் குவிண்டால் ரூ. 5,399 முதல் ரூ. 6,402 வரையிலும், கிழங்கு ரகம் ரூ. 5,233 முதல் ரூ. 5,899 வரையிலும், பனங்காளி ரகம் ரூ. 9,260 முதல் ரூ.12,219 வரையிலும் விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...