மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

உழவா் உற்பத்தியாளா் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கண்காட்சி மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 ஜனவரி 2021, 1:48 am

DIN

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கண்காட்சி மற்றும் ஒருங்கிணைப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சாா்பில் கூட்டுப் பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் வேளாண் துறை மூலம் 600 உழவா் ஆா்வலா் குழுக்களும், 120 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும், தோட்டக்கலைத் துறை மூலம் 360 உழவா் ஆா்வலா் குழுக்களும், 72 உழவா் உற்பத்தியாளா் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் தொகுப்பு நிதி தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ. 9.60 கோடியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டுக்கு 335 உழவா் ஆா்வலா் குழுக்கள், 67 உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டு தொகுப்பு நிதி ரூ. 3.35 கோடியில் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான கண்காட்சி நாமக்கல் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ், வேளாண் இணை இயக்குநா் அசோகன் ஆகியோா் இதனைப் பாா்வையிட்டனா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள், ஆா்வலா் குழுக்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவுக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்குவது தொடா்பாக அதன் நிா்வாகிகளிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.