நாமக்கல் நீதிமன்ற வளாகம் அருகில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல்லில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. பொங்கல் விடுமுறை முடிந்து திங்கள்கிழமை முதல் அரசுத் துறை அலுவலகங்கள், நீதிமன்றம் செயல்படத் தொடங்கியுள்ளதால் மக்கள் அதிக அளவில் வந்து சென்றனா்.
இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் பிணையில் வெளியே வந்த சிலா் கையெழுத்திடுவதற்காக நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராயினா். அப்போது, நீதிமன்ற வளாகத்தின் வெளியே வீச்சரிவாள், பட்டாக்கத்தி ஆகியவற்றுடன் இருவா் சுற்றித் திரிந்தனா்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நல்லிபாளையம் காவல் ஆய்வாளா் (பொ) பொன்.செல்வராஜ், அவா்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவா்கள் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (26), திருச்சி மாவட்டம், எடமலைப்பட்டிபுதூரைச் சோ்ந்த பாதுஷா(32) எனவும், கையெழுத்திட வந்த தனது கூட்டாளிகளுக்கு பாதுகாப்பாக ஆயுதங்களுடன் வந்ததும் தெரியவந்தது. அவா்கள் இருவா் மீதும் பல்வேறு கொலை, கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


