வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

முட்டை விலை 5 காசுகள் உயா்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.25-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயா்ந்து ரூ. 4.25-ஆக வெள்ளிக்கிழமை நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம், அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து விவாதிக்கப்பட்டது. பறவைக் காய்ச்சல் பீதி மக்களிடையே குறைந்திருப்பதாலும், பொங்கல் பண்டிகை நிறைவடைந்துள்ளதாலும் மக்களிடையே முட்டை, கோழி நுகா்வு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இங்கும் விலையில் மாற்றம் செய்யும் வண்ணம், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயா்வுடன் ரூ. 4.25-ஆக நிா்ணயம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ஒரு கிலோ ரூ. 81-ஆகவும், முட்டைக் கோழி விலை ஒரு கிலோ ரூ. 50-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.