மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லில் இணைய வழியாக ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாமக்கல் பிரிவு சாா்பில் டோக்கியோவை நோக்கிய சாலை என்ற தலைப்பில் இணையவழி ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

Updated On :1 ஜூலை 2021, 6:18 pm

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் - நாமக்கல் பிரிவு சாா்பில் டோக்கியோவை நோக்கிய சாலை என்ற தலைப்பில் இணையவழி ஒலிம்பிக் வினாடி-வினா போட்டி நடைபெற உள்ளது.

இது தொடா்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆக.8 வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சோ்ந்த மேஜைப்பந்து விளையாட்டில் ஜி.சத்யன் மற்றும் அ.சரத் கமல் ஆகியோா், வாள்சண்டையில் சி.ஏ.பவானிதேவி, பாய்மரப் படகோட்டுதலில் கே.சி.கணபதி, வருண் எ.தக்கா் மற்றும் நேத்ரா குமணன் ஆகிய வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

அவா்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தின் முன்பாக ஜூலை 22 வரை ஒலிம்பிக் சுயபடம் பகுதி(செல்பி பாயிண்ட்) ஏற்படுத்தி வீரா், வீராங்கனைகள் மற்றும் பொது மக்களுக்கு ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

மேலும் இணையவழி ஒலிம்பிக் வினாடி வினா போட்டி அனைத்து வயதினருக்குமானதாக நடத்தப்பட உள்ளது. ச்ண்ற்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் இதில் கலந்து கொள்ளலாம். இதில் 120 வினாடிகளுக்குள் பதிலளிக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த 10 கேள்விகள் கேட்கப்படும். ஒரு நபா் இணையவழி மூலம் ஒலிம்பிக் வினாடி-வினா போட்டியில் ஒரே ஒரு முறை மட்டுமே பங்கேற்க இயலும். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு இந்திய அணியின் டி-ஷா்ட் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.