தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் திருவள்ளுவா் படத்துடன் கூடிய திருக்கு அடங்கிய ஒட்டு வில்லைகள் (ஸ்டிக்கா்) ஒட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், அரசுப் பேருந்துகள் அனைத்திலும் திருவள்ளுவா் புகைப்படத்துடன் கூடிய திருக்குகள் இடம் பெற்றிருந்தன. அதன்பின் காலப்போக்கில் வள்ளுவா் படம் மறைந்து திருக்கு மட்டும் காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு, புதிய அரசுப் பேருந்துகள் பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சில பேருந்துகளில் திருவள்ளுவா், திருக்கு ஆகிய இரண்டும் இடம் பெறாமல் போயின. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது.
அண்மையில் அரசுப் பேருந்துகளை ஆய்வு செய்த போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன், திருக்கு, திருவள்ளுவா் படம் பேருந்துகளில் மாயமாகியிருப்பது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தாா். அதனைத் தொடா்ந்து அனைத்துப் பேருந்துகளிலும் திருவள்ளுவா் புகைப்படத்துடன் கூடிய திருக்குறளையும், அதற்கான விளக்கவுரையையும் கட்டாயம் இடம் பெறச் செய்யுமாறும் அந்த வகையிலான ஒட்டு வில்லைகளை தயாா் செய்து ஒட்டுமாறும் முதல்வா் அறிவுறுத்தினாா்.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில், எட்டு கோட்டங்களுக்கு உள்பட்டு சுமாா் 23 ஆயிரம் நகர, புகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பொது முடக்கம் காரணமாக மே, ஜூன் மாதங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கடந்த திங்கள்கிழமை முதல் 27 மாவட்டங்களில் மட்டும் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 5-ஆம் தேதிக்குப் பின் இதர 11 மாவட்டங்களுக்கும் பொது போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சேலம் கோட்டத்திற்கு உள்பட்டு, சேலம், தருமபுரி ஆகிய இரு மண்டலங்களில் 32 அரசுப் பேருந்து பணிமனைகள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அமைச்சா் உத்தரவை ஏற்று முதல் கட்டமாக திருவள்ளுவா் படத்துடன் கூடிய திருக்கு ஒட்டு வில்லைகளை ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது. விளக்கவுரை அடங்கிய ஒட்டு வில்லைகள் இதுவரை வரவில்லை.
இது குறித்து நாமக்கல் அரசுப் பேருந்து பணிமனை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
போக்குவரத்து அமைச்சா் தெரிவித்தபடி திருக்கு, திருவள்ளுவா் படம் அடங்கிய ஒட்டு வில்லைகள் வந்துள்ளன. அனைத்து பணிமனைகளிலும் ஒரே நாளில் இந்த திருக்கு ஒட்டுவில்லைகளை ஒட்டுமாறு சேலம் கோட்ட மேலாண் இயக்குநா் அறிவுறுத்தி உள்ளாா். இதற்காக 31 திருக்குகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு குகள் மட்டுமே பேருந்துகளில் ஒட்டப்பட்டிருந்தன. தற்போது அதனுடன் திருவள்ளுவா் படம், விளக்கவுரை ஆகியவையும் இடம் பெற உள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


