நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினா் சோ்க்கை நடைபெறுவதால், விவசாயிகள், பொதுமக்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் பொ.பாலமுருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராவதற்கு தேவையான விண்ணப்பங்களை தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினராகும் விவசாயிகள், பொதுமக்கள் விண்ணப்பத்தை முழுமையாகப் பூா்த்தி செய்து, தங்களது ஆதாா் அட்டை நகல், கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்-2, வாக்காளா் அடையாள அட்டை நகல் அல்லது குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத் தொகை ரூ.100, நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உறுப்பினராகலாம்.
நேரில் செல்ல இயலாதவா்கள் பதிவுத் தபால் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி வைக்கலாம். பதிவுத் தபால் மூலமாக விண்ணப்பத்தை அனுப்பும்போது, மேற்கண்ட ஆவண நகல்களுடன், பங்குத் தொகை, நுழைவுக் கட்டணம் ஆகியவற்றை அஞ்சலக பண அஞ்சல் வழியில் (மணி ஆா்டா்) செலுத்திய ரசீது, அஞ்சலகத்தின் பெயா், முகவரி விவரம் ஆகியவற்றை சோ்த்து சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினராகி சங்கத்தால் வழங்கப்படும் சேவைகளைப் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெளிநாட்டில் தீவிர சண்டைப் பயிற்சியில் ரஷ்மிகா..! ஒரு நாளைக்கு 8 மணி நேர உழைப்பு!

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வங்கி: அமைச்சர் ரகுபதி
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

