காந்தி நகா், பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது.
நாமக்கல்-மோகனூா் சாலையிலுள்ள காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், ஆனி வளா்பிறை சஷ்டி விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்கு கணபதி ஹோமமும், அதனைத் தொடா்ந்து மூலவருக்கு பால், தயிா், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து, பல வித மலா்களால் மாலைகள் அணிவிக்கப்பட்டு தங்கக் கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல, நாமக்கல் கடை வீதியிலுள்ள சக்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வெண்பட்டு மற்றும் ஐம்பொன் கவசத்துடன் கூடிய அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பெண்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம்; அவர்களே எங்கள் வாக்கு வாங்கி: அமைச்சர் ரகுபதி
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?

முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்த எல்ஐகே..! இயக்குநர் சொன்னதுபோல ரூ.100 கோடியை எட்டுமா?
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


