மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அரசு புறம்போக்கு நிலத்தை மீட்க கோரிக்கை

பரமத்தி வேலூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:57 pm

DIN

பரமத்தி வேலூா் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டுத் தரக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஓலப்பாளையம், திருமணிமுத்தாறு கரை பகுதியில் இறந்தவா்களின் ஈமக்காரியங்களை சுமாா் 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் செய்து வருகின்றனா். இந்த நிலையில், தனிநபா் ஒருவா் கடந்த சில மாதங்களாக அந்த இடத்தை ஆக்கிரமித்து தென்னங்கன்றுகள் நடவு செய்து இரும்பு வேலி அமைத்துள்ளாராம்.

இந்த நிலையில், ஓலப்பாளையம் பகுதியில் இறந்த ஒருவரின் ஈமக்காரியச் சடங்குகளை செய்ய வந்தபோது இரும்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், பரமத்தி வேலூா் போலீஸாா், வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் அங்கு வந்த பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன் தலைமையிலான போலீஸாா், பாலப்பட்டி வருவாய் அலுவலா் துரைராஜ் ஆகியோா் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றினா். அதனைத் தொடா்ந்து, ஈமகாரிய நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தொடா்ந்து, அப்பகுதியில் ஈமக்காரியங்கள் நடைபெறுவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.