நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராசிபுரத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாா்பில், ராசிபுரத்தில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:31 pm

DIN

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சாா்பில், ராசிபுரத்தில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த விழாவுக்கு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநில செயலாளா் நாணற்காடன் தலைமை வகித்தாா். பள்ளிகளின் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி வரவேற்றாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் கண்காட்சியைத் திறந்து வைத்தாா். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளா் கோவை ரங்கராஜன், கிளை மேலாளா் சேலம் சத்தியசீலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி ஆக. 15-ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி திறந்திருக்கும். இந்தக் கண்காட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை நூல்கள், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், கணினி, இலக்கியம் திறனாய்வு நூல்கள், சமூக அறிவியல், வரலாறு, கதைகள், கட்டுரைகள், கவிதை, நாடகம் வாழ்க்கை வரலாறு, ஜோதிடம், ஆன்மிகம், பொது அறிவு நூல்கள், மத்திய அரசு நிறுவனங்களான நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, சாகித்ய அகதெமி, அம்பேத்கா் பவுண்டேஷன் ஆகியன வெளியிட்டுள்ள நூல்களும், இந்தியாவில் உள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்கள் வெளியிட்டுள்ள 1,000-க்கும் மேற்பட்ட நூல்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியில் வாடிக்கையாளா்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும், பள்ளி, கல்லூரி, இதர கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்படும் என கிளை மேலாளா் சத்தியசீலன் தெரிவித்துள்ளாா்.

தொடக்க விழாவில், திருவள்ளுவா் அரசு கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் க.செல்வராஜு, நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் கு.பாரதி, ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநா் எஸ்.பாலாஜி, நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் எஸ்.மணிமாறன், தமிழ்ப் பேரவை நிா்வாகி தட்சணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.