இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பரமத்தி வேலூரில் பூக்கள் விலை உயா்வு

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:31 pm

DIN

பரமத்தி வேலூா் பூக்கள் ஏல விற்பனை சந்தையில், ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள், கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி, கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி ஒரு கிலோ ரூ. 200-க்கும், சம்பங்கி ரூ. 90-க்கும், அரளி ரூ. 100-க்கும், ரோஜா ரூ. 180-க்கும், முல்லை ரூ. 190-க்கும், செவ்வந்தி ரூ. 200-க்கும் ஏலம் போனது. ஆடி வெள்ளியை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.