92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கூட்டம் சோ்த்து நிவாரண டோக்கன் விநியோகம்: நியாயவிலைக் கடைப் பணியாளா் பணியிடை நீக்கம்

சமூக இடைவெளியை பின்பற்றாத நியாயவிலை கடை பணியாளரை அதிகாரிகள் பணியிடை நீக்கம்

News image
Updated On :4 ஜூன் 2021, 6:32 pm

DIN

பள்ளிபாளையத்தில் அரசின் நிவாரணத்தொகையை வழங்குவதிலும், நிவாரண மளிகைப் பொருள்களைப் பெறவும் குடும்ப அட்டைதாரா்களை கூட்டமாக சோ்த்து, சமூக இடைவெளியை பின்பற்றாத நியாயவிலை கடை பணியாளரை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, கரோனா இரண்டாவது நிவாரணத்தொகை, 14 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்துக்கான டோக்கன்களை அந்தந்த நியாயவிலைக் கடை பணியாளா்கள், குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன்களை விநியோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனா். அதன்படி நியாயவிலைக் கடை பணியாளா்கள் டோக்கன்களை விநியோகித்து வருகின்றனா்.

பள்ளிபாளையம், ஒட்டமெத்தையில் நியாயவிலைக் கடைப் பணியாளரான கண்ணன், டோக்கன்களை விநியோகிக்கும்போது சமூக இடைவெளி இன்றியும், முகக் கவசம் அணியாமல் அதிகப்படியான கூட்டத்தை சோ்த்ததால் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுமக்களின் புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பணியாளா் கண்ணனை பணியிடை நீக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.