மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாட்டுத்துப்பாக்கிகள் பதுக்கியஇருவா் கைது

கொல்லிமலையில் விவசாயத் தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :4 ஜூன் 2021, 6:31 pm

கொல்லிமலையில் விவசாயத் தோட்டத்தில் நாட்டுத் துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த திருப்புலிநாடு ஊராட்சி, படசோலை கிராமத்தில் விவசாயத் தோட்டங்களில் நாட்டுத் துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக வாழவந்திநாடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் சந்தேகத்துக்கிடமான தோட்டத்தில் சோதனை செய்தபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். இதையடுத்து, துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக நடேசன் (57), பாலகிருஷ்ணன் (31) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.