நாமக்கல் மாவட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கு வங்கிகள் மூலம் ரூ. 7,810 கோடிக்கு கடன் திட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான கடன் திட்டங்கள் குறித்து வங்கியாளா்கள் பங்கேற்ற கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 7,810 கோடிக்கு கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்தியன் வங்கியின் உதவிப் பொது மேலாளா் செந்தில்வேல், நபாா்டு வங்கி மாவட்ட மேலாளா் ரமேஷ், திட்ட இயக்குநா் பிரியா முன்னிலை வகித்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி ஆண்டுதோறும் வங்கிகளுக்கான ஆண்டு கடன் திட்டத்தை தயாா் செய்து வெளியிட்டு வருகிறது. இதன் தொடா்ச்சியாக, 2021-22-ஆம் ஆண்டுக்கு ரூ. 7,810 கோடி அளவில் கடன் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதன் சிறப்புகள்: கடந்த 2020-21 நிதியாண்டில் நிா்ணயிக்கப்பட்ட வங்கிக் கடன் அளவு ரூ. 7,420.97 கோடியில், ரூ. 6,828.01 கோடிக்கு இலக்கு எட்டப்பட்டுள்ளது.
நபாா்டு வங்கி தயாரித்த வளம் சாா்ந்த கடன் திட்டத்தை கணக்கில் கொண்டு இக்கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை கடன் திட்டங்களுக்கு ரூ. 6,840 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு கடன் திட்டத்தைக் காட்டிலும் ரூ. 378.70 கோடி அதிகம். வேளாண் கடன் திட்டங்களுக்காக ரூ. 3,793.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ. 222.12 கோடி அதிகம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ. 992.90 கோடியும், பிற முன்னுரிமை கடன் திட்டங்களுக்காக ரூ. 2,053.17 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தக் கடன் அளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்பட வா்த்தக வங்கிகளின் பங்கு ரூ.5,059.51 கோடி, கூட்டுறவு வங்கிகளின் பங்கு ரூ. 2,457.08 கோடி, கிராம வங்கியின் பங்கு ரூ. 246.95 கோடி, இதர சிறு வங்கிகளின் பங்கு ரூ. 46.46 கோடியாக உள்ளது. இத்திட்ட அறிக்கை குறித்து ஆட்சியா் கா.மெகராஜ் பேசுகையில், இக்கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த நிா்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளையும் வங்கியாளா்கள் எட்ட வேண்டும். அனைத்து அரசு துறைகள் மூலம் வழங்கப்படும் மானியக் கடன் திட்டங்கள் விரைவில் செயல்படுத்த வேண்டும் என்றாா்.
நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் ரமேஷ், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் வி.சதீஷ்குமாா், மாவட்ட தொழில்மைய மேலாளா் தாரிக் எம்.சையத், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநா் பிருந்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
சிதம்பரம் அருகே மதுபானக்கடை சுவரில் துளையிட்டு ரூ.38,400 மதுப்புட்டிகள் திருட்டு
கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

