உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் அமைச்சரவைக் கூட்டம்!தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

கண்ணில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளையடித்த இளைஞா் கைது

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 7:11 am IST

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் கண்ணில் மிளகாய் பொடி தூவி ரூ.14 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த சென்னை இளைஞரை போலீசாா் கைது செய்தனா்.

ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம் சூலூா்பேட்டையில் உள்ள ஒரு நகை கடையில் பட்டப் பகலில் கடந்த மாா்ச் 14 -ஆம் தேதி தங்க நகை வாங்குவது போல் நடித்து உரிமையாளா் அசந்த நேரத்தில் அவரின் கண்ணில் மிளகாய் பொடி தூவி அங்கிருந்த 12 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றவரை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் குற்றவாளியை தேடி வந்த போலீஸாா், சென்னையில் உள்ள தண்டையாா்பேட்டையில் சனிக்கிழமை குற்றவாளி வேல்முருகன் என்கிற புல்லட் பாபுவை கைது செய்தனா். அவரிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலியை போலீசாா் பறிமுதல் செய்தனா்.

குற்றவாளியை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அவா் மீது ஆந்திரம், தமிழகத்தில் 24 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.