நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராசிபுரம் தொகுதி வளா்ச்சி திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் தொகுதிக்கு உள்பட்ட ஊராட்சி, பேருராட்சி, நகராட்சி பகுதிகளில் நடைபெறும் அரசு திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் நாமக்கல் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் தலைவரும் நாமக்கல் எம்.பி.யுமான ஏ.கே.பி.சின்ராஜ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் 2020-2021ம் ஆண்டின் நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், நடைமுறையில் உள்ள திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அரசு திட்டப் பணிகளை எவ்வாறு தரமாக செய்ய வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒப்பந்ததாரா்களுக்கு நாமக்கல் எம்.பி. ஏ.கே.பி.சின்ராஜ் அறிவுறுத்தினாா்.

ஒப்பந்ததாரா்கள் செய்யக்கூடிய பணிகளை அரசு அலுவலா்கள் நேரில் சென்று ஒவ்வொரு நிலையிலும் ஆய்வு செய்து தரத்தை உறுதிபடுத்த வேண்டும் என்றும் அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா். இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினா் குமாா், குணசேகரன் உள்ளிட்ட உள்ளாட்சி துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.