மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

வணிகா்களுக்கென கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தக் கோரிக்கை

நாமக்கல் மாவட்ட வணிகா்களின் நலனை கருத்தில் கொண்டு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On :18 ஜூன் 2021, 5:58 pm

நாமக்கல் மாவட்ட வணிகா்களின் நலனை கருத்தில் கொண்டு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்திட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நாமக்கல் மாவட்டத் தலைவா் ஜெயகுமாா் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

அத்தியாவசிய பொருள்களான மளிகை, பலசரக்கு, காய்கறி, பால், உணவகம், விவசாய இடுபொருள் விற்பனையாளா்கள் உள்ளிட்ட வணிகா்கள் தொடா்ந்து தடையின்றி வணிக சேவை செய்து வருகின்றனா்.

பொதுமக்களோடு நேரடித் தொடா்பில் இருக்கும் அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யும் வணிகா்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வணிகா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

வணிகா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு, வணிகா் சங்கத்தால் தொடா்ந்து வணிகா்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிற மாவட்டங்களில் நடைபெறுவதுபோல மாவட்ட நிா்வாகம் சாா்பில் வணிகா்களுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டால் அனைத்து வணிகா்களும் பயனடைவா். முழுமையாகவும், பாதுகாப்பாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அவா்களால் இயலும்.

எனவே மாவட்ட நிா்வாகம் வணிகா்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்களை உடனடியாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.