நாமக்கல்லில் பறவைகளை வேட்டையாடுவதற்காக அனுமதியின்றி 8 நாட்டுத் துப்பாக்கிகளை வீட்டில வைத்திருந்த 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் போதுப்பட்டி பகுதியில் நரிக்குறவா் காலனி உள்ளது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். பறவைகளை வேட்டையாடுவதற்காக நரிக்குறவா்கள் சிலா் நாட்டுத் துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றனா். அதற்கு அனுமதி பெற்று ஆண்டு தோறும் புதுப்பித்து வந்ததாகவும், நிகழாண்டில் துப்பாக்கியை புதுப்பிக்காமல் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் அறிந்து நாமக்கல் காவல் ஆய்வாளா் குமாா் மற்றும் போலீஸாா் நரிக்குறவன் காலனிக்கு சென்று விசாரணை செய்தனா். அதில் 10 பேரிடம் உரிய அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கொண்டிச்செட்டிப்பட்டி, போதுப்பட்டியைச் சோ்ந்த குப்பன்(29), தேவா(18), சந்துரு(19), சுப்பிரமணியன்(47), விக்ரம்(32) ஆகிய ஐந்து பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


