92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செங்குந்தா் கல்லூரியில் மகளிா் தினவிழா

திருச்செங்கோடு செங்குந்தா் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:46 pm

DIN

திருச்செங்கோடு செங்குந்தா் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் கல்லூரியில் உலக மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவா் ஜான்சன்ஸ் நடராஜன் மற்றும் செயலாளரும் தாளாளருமான பேராசிரியா் பாலதண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரியின் முதன்மை செயல் அலுவலா் மதன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்குநா் அரவிந்த் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரியின் முதல்வா் சதீஷ் குமாா் வரவேற்றாா். விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை அக்குபஞ்சரிஸ்ட் கலைவாணி தங்கவேல் காணொலி காட்சியின் மூலம் கலந்து கொண்டாா்.

அவா் பொது மருத்துவம் பற்றியும் மனித உடல் பற்றியும் மனம், ஆன்மாவைப் பற்றியும் அறியும் அறிவியலே வாழ்வியல் என விளக்கினாா். முன்னதாக செங்குந்தா் மகளிா் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் சத்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.