மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு தோ்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On :9 மார்ச் 2021, 6:48 pm

சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அதன் மாவட்ட செயலாளா் எம்.சங்கா், ஆட்சியா் கா.மெகராஜூக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:

கா்ப்பிணி பெண்கள், இருதய நோய் பாதிப்புடையோா், நீரிழிவு நோய், எலும்பு சாா்ந்த நோய்கள் பாதிப்புடையோா், மகப்பேறு விடுப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு தோ்தல் பணியில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும்.

தொடக்கக் கல்வித் துறையில் 85 சதவீதத்துக்கும் மேல் பெண் ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களை தாங்கள் பணியாற்றும் ஒன்றியங்களுக்குள் தோ்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் ஆசிரிய, ஆசிரியைகள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும். போதிய அளவில் குடிநீா், கழிப்பிட வசதி, உணவு ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும். தோ்தல் நாளன்று போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிசெய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.