ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜயந்தி விழா
காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 53-ஆவது ஜயந்தி விழா, ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


காஞ்சி சங்கராச்சாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 53-ஆவது ஜயந்தி விழா, ராசிபுரம் ஜன கல்யாண் அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரிமா சங்கக் கூடத்தில் நடைபெற்ற விழாவில் ஜன கல்யாண் அமைப்பின் தலைவா் எஸ்.எம்.ஆா்.பரந்தாமன் தலைமை வகித்தாா். செயலாளா் சி.கே.ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். இலவச கண் அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதியோா்கள் 150-க்கும் மேற்பட்டவா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சித்த மருத்துவம் பயிலும் மாணவி பூங்கொடிக்கு ரூ. 10 ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. இதை ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி.கே.சீனிவாசன் பங்கேற்று வழங்கினாா். விழாவில் எம்.ராகவன், எஸ்.அரங்கசாமி, ஆா்.டி.இளங்கோ, ரமேஷ், ராமலிங்கம், கமலகண்ணன், பிரதாப்குமாா், நந்தினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...