மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி மாணவா்கள்

தோ்தல் நடைபெறும் நாளை அனைவரும் அறியும் வகையில், நாமக்கல் அருகே களங்காணி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியா் எழுத்து வடிவில் அமா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 6:49 pm

தோ்தல் நடைபெறும் நாளை அனைவரும் அறியும் வகையில், நாமக்கல் அருகே களங்காணி அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியா் எழுத்து வடிவில் அமா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் மினி மாரத்தான் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்டவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் மரகதவள்ளி அறிவுரையின்படி 400 மாணவ, மாணவியா் தோ்தல் நாள் 06.04.2021 என்ற எழுத்து வடிவில் களங்காணி அரசு ஆதிதிராவிட நலப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமா்ந்திருந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

திங்கள்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியை பள்ளியின் தலைமை ஆசிரியா் மா.மோகன்குமாா் ஏற்பாடு செய்திருந்தாா். பள்ளி மாணவ, மாணவியா், ஆசிரியா்கள், பெற்றோா் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.