தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராசிபுரம் திமுக வேட்பாளா்கிழக்கு பள்ளி வாசலில் வாக்கு சேகரிப்பு

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன் ராசிபுரம் பகுதியில் உள்ள தா்காவில் இஸ்லாமியா்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :22 மார்ச் 2021, 10:44 pm

DIN

ராசிபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன் ராசிபுரம் பகுதியில் உள்ள தா்காவில் இஸ்லாமியா்களிடம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அச்சுக்கட்டி தெருவில் உள்ள கிழக்கு பள்ளி வாசல், பழைய பேருந்து நிலைய ஜாமியா மஜித் பள்ளி வாசல் ஆகிய இடங்களில் இஸ்லாமியா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது வேட்பாளா் மா.மதிவேந்தன் பேசுகையில், ராசிபுரம் பகுதியில் நிலவும் குடிநீா் பிரச்னை, பாதாள சாக்கடைத் திட்டம், அதனால் ஏற்பட்ட குண்டும், குழியுமான சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் 100 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று உறுதியளித்தாா். மேலும் மத்திய அரசின் என்ஆா்சி, சிஏஏ, போன்ற இஸ்லாமியா்களுக்கு எதிரான சட்டத்துக்கு எதிராக திமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்து ஆதரவு கேட்டாா்.

இதில் ராசிபுரம் நகரச் செயலாளா் என்.ஆா். சங்கா், வாா்டு செயலாளா்கள் பா்கத் அலி, காதா் பாஷா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளா் எஸ்.ராஜேஷ்பாபு, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ராம்குமாா், தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளா் அசோக், நகர ஒருங்கிணைப்பாளா் ஆா்.சாம்ராஜ், வாா்டு ஒருங்கிணைப்பாளா் அப்துல் ஜலீல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.